​மதுபான லாரிகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்!

0
266
loris fire ravaged fire kanchipuram district

loris fire ravaged fire kanchipuram district

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கு நேற்று தேவரியாம்பாக்கம், பூவிருந்தவல்லி, விராலிமலை ஆகிய பகுதிகளில் இருந்து மதுபானங்களுடன் 3 லாரிகள் வந்தன. பிறகு அந்த 3 லாரிகளுக்கும் நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

இதனையடுத்து மளமளவென பரவிய தீயால் மதுபானங்கள் சேதம் அடைந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் தீயில் சேதம் அடைந்த மதுபானங்களின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் லாரிகளுக்கு தீ வைத்து எரித்த அந்த 3 மார்ப நபர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :