கோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் படக்குழு..!

0
282
GST Vandi Goli Soda 2 team,GST Vandi Goli Soda 2,GST Vandi Goli Soda,GST Vandi Goli,GST Vandi

(GST Vandi Goli Soda 2 team)

2014-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “கோலி சோடா”. இப்படத்தின் இரண்டாம் பாகமான ”கோலிசோடா 2” படத்தினை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது, அதன் இரண்டாம் பாகத்தை விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்திலும், இயக்குநர் கெளதம் மேனன் போலீஸாகவும் நடித்துள்ளனர்.

முதல் பாகம் தங்களுக்கென ஒரு முகவரி தேடும் சிறுவர்களின் கதை என்றால், இரண்டாம் பாகத்தில் தங்களுக்கென கிடைத்த முகவரியை தக்க வைத்துக் கொள்ள இளைஞர்கள் சிலர் நடத்தும் போராட்டமே கதைக்களம்.

இப்படம் அடுத்தமாதம் 14 ஆம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சென்சாரில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில், கோலிசோடா 2 படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஜிஎஸ்டி என்ற வண்டியை படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த வண்டியானது மக்களுக்கு பயன்படும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வர இருக்கிறது.

வழக்கம்போல, படத்தின் விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு மாற்றாக, வித்தியாசமாக நேரடியாகவே மக்களை சென்றடையும் வகையில் இந்த வண்டி பயணம் செய்யவுள்ளது. இதில் பொதுநலத்துடன் தங்களது சுயநலமும் கலந்துள்ளது என்கிறது படக்குழு.

இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Video Source : Rough Note

<MOST RELATED CINEMA NEWS>>

ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!

ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!

கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!

தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!

சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!

ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!

மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!

இரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..!

Tags :-GST Vandi Goli Soda 2 team

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 28-05-2018