உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்

0
880
Crab coconut milk pulau
(Crab coconut milk pulau)
(Crab coconut milk pulau)
உடலுக்கு ஆரோக்கியமான, சுவையான  குதிரைவாலி  தேங்காய்ப்பால்  புலாவ்  தயார் செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;-
குதிரைவாலி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2 (சிறியது)
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது – 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
தேங்காய்ப்பால் – ஒரு கப்
கிராம்பு, ஏலக்காய், பட்டை – தலா 2
செய்முறை;-
அடுப்பை பற்ற வைத்து பிறகு குக்கரில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடான பிறகு கராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக  வதங்கிய  பின்,  இஞ்சி  பூண்டு  விழுது  மற்றும்  பச்சை மிளகாய்  விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
அரைத்து வைத்த தக்காளியை இதனுடன் சேர்த்து மீண்டும் வதக்கிய பின், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை தேவையான அளவு சேர்க்கவும்.
அடுத்ததாக, தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்த பின் அதனுடன் வைத்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.
அடுத்ததாக , கடாயின் மூடியை பயன்படுத்தாமல் பிரியாணியை போல, சரியான அளவு தட்டை வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் சிறிதான அனலில் வேக வைக்கவும்.
புலாவ் நன்றாக வெந்த பின், கடாயை திறந்து ஒரு முறை சாதத்தை கிளறி இறக்க வேண்டும். மேலும் சுவையை அதிகமாக்க முந்திரியை நெய்யில் வறுத்து புலாவில் சேர்க்கலாம்.
இப்பொழுது  சுவையான குதிரைவாலி புலாவ் தயார்.
tags;-Crab coconut milk pulau