உடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்?

0
676
calories burn body weight loss, tamil health news, health tips, health tips in tamil, health news,

{ calories burn body weight loss }

கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்தும் அளவாகும்.

அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன.

ஆண்கள் மற்றும் பெண்கள் யாராக இருந்தாலும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அதிகமாக கவலைப்பட்டு பின்பற்றுவது கலோரிகளைத் தான். ஏனெனில் இந்த கலோரிகளை மனதில் வைத்தால் தான் நாம் என்ன சாப்பிடுகின்றோம் எதனால் உடல் எடை அதிகமாகின்றது என்பதை அறிய முடிகின்றது.

மேலும், கலோரிகளும் உடல் எடையும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக உள்ளது. கலோரியை தவிர வேறு காரணங்களும் உடல் எடை அதிகமாக காரணமாக இருக்கின்றன.

குறைவான கலோரிகளை எடுக்கும் போது கூட அது உங்கள் உடல் எடையை குறைக்காமல் அதிகரித்து விடுகின்றன.

கலோரி என்பது உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல் ஆகும். இந்த ஆற்றலை கொண்டு தான் நாம் நிறைய செயல்கள் மற்றும் நம் உறுப்புகளுக்கான சக்தி எல்லாம் கிடைக்கின்றன.

ஒரு நாளைக்கு போதுமான கலோரிகளை நாம் எடுக்காவிட்டால் அந்த நாள் முழுவதும் சோர்வு, தலைவலி, உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இதுவே அதிகமான கலோரி உணவுகளை எடுக்கும் போது அந்த ஆற்றல் செலவழியாமல் உடலிலே கொழுப்பாக மாறி கொழுப்பு செல்களில் தங்கி விடுகின்றன. இதனால் தான் உடல் எடையை எக்குதப்பாக எகிறுகின்றது.

எனவே இதற்கான ஓரே தீர்வு சரியான உணவுகளை சரியான சமமான கலோரி விதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உணவுகளும் வெவ்வேறு அளவுகளில் கலோரிகளை கொண்டுள்ளன.

இப்பொழுது நிறைய மொபைல் ஆப் இதற்கு வந்துள்ளது. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றன என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன.

நாங்களும் இங்கே ஒரு மனிதனின் ஒரு நாளைக்கான கலோரி அளவு களையும் அதைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் இங்கே கொடுக்க உள்ளோம். வாங்க பார்க்கலாம்..

[ கலோரிகள் மற்றும்  உடல் எடை ]

நமது தினசரி செயல்களை செய்வதற்கு கலோரிகள் நமக்கு மிகவும் தேவை.

ஒரு நாளைக்கான கலோரியின் அளவானது வயது, பாலினம் மற்றும் உடற் செயல்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் ஒரு மனிதனை பொருத்தது.

19-30 வயதுடைய ஒரு ஆண் ஒரு நாளைக்கு சுறுசுறுப்பாக எல்லா செயல்களையும் செய்ய 2600-2800 கலோரிகள் தேவைப்படுகின்றன.

19-30 வயதுடைய ஒரு சுறுசுறுப்பான பெண்ணிக்கு ஒரு நாளைக்கு 2000 – 2200 கலோரிகள் தேவைப்படுகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள கலோரிகளின் அளவு சரியான உடல் எடையை கொண்டுள்ள ஆண் மற்றும் பெண்களுக்கு சொல்லப்பட்டது. உடல் எடையை குறைக்க சொல்லப்பட்டது அல்ல.

நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் மேலே குறிப்பிட்டுள்ள ஒரு நாளைக்கு தேவையான உங்கள் கலோரிகளிலிருந்து 500 கலோரிகளை கழித்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக உடல் எடையை குறைக்க விரும்பும் ஒரு ஆணின் ஒரு நாளைக்கான கலோரிகள் 2000, ஒரு பெண்ணுக்கான கலோரிகள் 1500 ஆகும்.

நீங்கள் குறைந்த அளவு கலோரிகளை எடுக்கும் போது என்னவாகும் என்றால் உங்கள் உடலிலே தங்கியுள்ள கொழுப்பு கள் ஆற்றலாக மாற்றப்பட்டு உங்கள் தினசரி வேலைகளை செய்ய உதவுகிறது.

எனவே இதைப் பின்பற்றினால் நீங்களும் விரைவில் உங்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

Tags: calories burn body weight loss

<< RELATED HEALTH NEWS >>

*கோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா?

*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…!

*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…!

*உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

http://tamilfood.com/

http:technotamil.com

http://tamilgossip.com/

http:cinemaulagam.com

http://sothidam.com/

http://tamilsportsnews.com/