(American Local Flight Passenger Cut Blade Demand Beer)
அமெரிக்க உள்நாட்டு பயணிகள் விமானத்தில் ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் குடிக்க ‘பீர் கேட்ட போது அவர் கொடுக்க மறுத்த காரணத்தால் பிளேடால் தனது உடலை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் செயின்ட் குரோயிஸ் நகருக்கு புறப்பட்டு சென்றவேளை அதில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். அந்த நேரம் குறித்த பயணிக்கு ஏற்கனவே ஒரு பீர் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் மற்றுமொரு பீர் கேட்டபோது பணிப்பெண் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கூச்சலிட்டார். பின்னர் பாத்ரூம் சென்ற அவர் வெளியே வராமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். ஆனால் அவர் தனது அருகில் அமர்ந்து இருந்தவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு தகராறு செய்தார்.
ஒரு கட்டத்தில் அவர் பிளேடால் தனது உடலை கிழித்து கொண்டார். இதனால் ரத்தம் கொட்டியது.
இதனையடுத்து விமானம் செயின்ட் குரோயிஸ் நகரை வந்தடைந்த போது பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)