அருமையான காளான் பிரியாணி

0
645
mushroom biryani

(mushroom biryani)

சுவையான, குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான  காளான்  பிரியாணி  எளிதாக  எப்படி வீட்டிலேயே சமைப்பது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

பாசுமதி அரிசி – 2 டம்ளர்
மொட்டுக்காளான் – 2 பாக்கட்
பெரிய வெங்காயம் – ௨
தக்காளி – ௩
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – ஒன்று
பட்டை – ஒரு அங்குலம்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கிராம்பு – 4
மிளகாய் – 4,
மல்லித் தழை – அரைக் கட்டு
புதினா – அரைக் கட்டு
ஏலக்காய் – 2,
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை;-

காளானை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும் ,பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கிக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, கிராம்பு,  ஒரு  ஏலக்காய்,  ஒரு தக்காளி, இரண்டு  மிளகாய், கால் கட்டு புதினா மற்றும்  கால் கட்டு மல்லித் தழை ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சிறிதளவு பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
 தாளித்தவற்றோடு மிளகாயை கீறிப்போட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும், பொன்னிறமானதும் தக்காளி, அரைத்த விழுது, உப்பு, மீதமுள்ள புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
வதங்கியதும் காளானை போட்டு நன்றாக வதக்கவும்.
அடுத்ததாக , தண்ணீர் விட்டவுடன் அளந்து வைத்துள்ள நீரில் பாதியளவு ஊற்றி குக்கரில் 4 விசில் வரவிடவும்.
ஆவியடங்கிய பின்பு ஊறவைத்த அரிசியைப் போட்டு குக்கரை மூடி பெருந்தீயில் வைக்கவும்.
ஆவி வந்தவுடன் பாரத்தை வைத்து  சிறுந்தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் விடவும்.

பாரத்தை நீக்கி,  பிரியாணியை  கிளறி  தேவையானால்  ஒரு  தேக்கரண்டி நெய் சேர்க்கலாம்.

tags;-mushroom biryani