​உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்!

0
782
world's big Chariot thiagarajar temple thiruvarur

world’s big Chariot thiagarajar temple thiruvarur

திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், முக்தியளிக்கும் தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

இந்த கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதன் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டமும், அதன் பிறகு கோயிலின் மேற்கு புறமுள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் இக்கோவிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆழித்தேர் 30 அடி அகலமும், 96 அடி உயரமும், 220 டன் எடையும் கொண்டது. இத்தேரை நகர்த்துவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவை. அத்தகைய தேர்த் திருவிழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :