மாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை!

0
707
Relatives victims death Magistrate Suman

Relatives victims death Magistrate Suman

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் வன்முறையைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேரின் உடல்களுக்கு ஏற்கனவே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், 6 பேரின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும், என அவர்களின் உறவினர்களுக்கு மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினர்.

இதனிடையே, பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் போது, தங்கள் தரப்பு வழக்கறிஞர் மற்றும் மருத்துவர்களை அனுமதித்தால், பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உறவினர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள 6 பேரின் உடல்களுக்கும் விரைவில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Tamil News

Tamil News Group websites :