வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி

0
323
president direct visit effect floods maithripala sirisena

அதிக மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிலாபத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது மகாவௌ பிரதேச செயலகத்தில் பிரதேச அரசியல் பிரதிநிதிகளையும் அரச அதிகாரிகளையும் சந்தித்த ஜனாதிபதி, மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண செயற்திட்டங்கள் தொடர்பாக கண்டறிந்தார் president direct visit effect floods maithripala sirisena

இடம்பெயர்ந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், விபத்துக்குள்ளான மக்களை மீட்கும் பணிகளில் முப்படையினரது ஒத்துழைப்புடன் முறையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

அனர்த்த நிலைமைகளின்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை போன்றே அனர்த்தத்தின் பின்னரான காலத்தில் மக்களின் நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் அமுல்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன், அனர்த்தங்களுக்குள்ளான ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் மற்றும் அரச சேவையில் உள்ள கீழ்மட்ட பணியாளர்களுக்காக விசேட நிவாரண செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இவ்வனைத்து நிவாரண செயற்பாடுகளின்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுற்று நிரூபங்களை தடையாக கொள்ள வேண்டாம் எனவும் மக்களின் தேவைகளுக்கேற்ப உரிய தீர்மானங்களை மேற்கொண்டு தேவைக்கேற்ப அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
president direct visit effect floods maithripala sirisena

More Tamil News

Tamil News Group websites :