இதுவே சிறந்த தருணம் – விரிவு பணிகளை ஆரம்பிப்பது சிறந்ததாக அமையும்

0
348
tamilnews sri lankan tamil nation first citizen sinhala history

தமிழ் மக்கள் பேரவை தனது பணிகளை விரிவடையச் செய்ய வேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். good time party development north chief minister vickneshwaran

யாழ்ப்பாண நூலக கேட்போர் கூடத்தில இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விரிவுபடுத்தலுக்கு இளைஞர் யுவதிகளே உறுதுணையாக இருக்கப் போவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆத்மீக ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும், அவர்கள் வலுப்பெற வேண்டிய ஒரு கால கட்டம் கனித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை யாவரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம்.

தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழி நடத்துவது அதன் கடமையாகும்.

இதுவரை காலமும் அரசியல் கொள்கைகளை முன் வைத்து கூட்டங்கள் வைத்து மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டப்பட்டதுடன், தொடர்ந்தும் அந்த பணிகள் முன்னெடுக்கப்படும்.

ஆனால் தமது காலத்தின் பின்னர் தமது அரசியல் சமூக அமைப்புக்களைக் கொண்டு நடத்தப் போவது இளைஞர் யுவதிகளேயாகும்.

தலைமைத்துவம் திடீர் என்று அவர்கள் வசம் செல்வதிலும் பார்க்க இப்பொழுதிருந்தே அவர்கள் தமது காரியங்களை, கடப்பாடுகளை, கடமைகளை உணர்ந்து நடக்கத் தொடங்கினால், அதுநன்மை தரும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டார்.
good time party development north chief minister vickneshwaran

More Tamil News

Tamil News Group websites :