அணைக்கட்டுக்களை திருத்தி அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்

0
438
bridge repair army involve commander order latest news

அணைக்கட்டுக்களை திருத்தி அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர்
கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குருநாகல் பகுதியில் பாதிப்புக்குள்ளான அணைக்கட்டுக்கள் இராணுவத்தினரால் சீர்செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. bridge repair army involve commander order latest news

பசளை பைகளில் மண்நிரப்பி அணைக்கட்டுகளை சீரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் நேற்று முன்தினம் முதல் ஈடு;பட்டு வருகின்றனர்.

532 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசுந்தர அவர்களது தலைமையில் 8 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 25 இராணுவத்தினர் இந்த அணைக்கட்டு திருத்தியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படை வீரர்களும் இந்த அனர்த்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பணிகள் அனைத்தும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் பணிப்புரையின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
bridge repair army involve commander order latest news
More Tamil News

Tamil News Group websites :