(Ja-Ela canal overflows)
ஜா-எல ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு வளிமண்டல திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக அத்தனுகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்தமையினாலேயே ஜா-எல ஆறு பெருக்கெடுத்துள்ளது.
நீர் கொழும்பு ஜா-எல கந்தான மினுவங்கொடை கம்பஹா அத்தனகல்லு மக்களை அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை மகா ஓயா பெருக்கெடுத்துள்ளமையால் புத்தளம் நாத்தாண்டி மாவெவ மற்றும் வென்னப்புவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புத்தளம் -கொழும்பு பிரதான வீதியின் லுனுவில பாலத்திற்கு மேலாக வெள்ள நீர் போவதால் சிறிய வாகனங்கள் பயணிக்காமல் இருக்குமாறும், பொதுமக்கள் வெள்ளத்தை பார்வையிட செல்வதை தவிர்த்துகொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:Ja-Ela canal overflows,Ja-Ela canal overflows,