துரோகம் செய்தது யார் என்று பாருங்க: ஆதாரம் வெளியிட்ட காயத்ரி

0
657
Sterlite protest thoothukudi gayathri raghuram

(Sterlite protest thoothukudi gayathri raghuram)
ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தமிழக மக்களின் முதுகில் குத்தியது காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகள் தான் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டம் நடத்திய மக்களை நோக்கி போலீசார் சுட்டதில் 13 பேர் பலியாகினர்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகள் நம் முதுகில் குத்திவிட்டதாக காயத்ரி ரகுராம் கூறுகிறார்.

 

காயத்ரி

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்தது பாஜக அரசு அல்ல காங்கிரஸ் அரசு தான் என்று கூறி அதற்கான ஆதாரத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

பாவம்
காங்கிரஸ் தான் செய்த குற்றத்தை நியாயப்படுகிறது என்றும், காங்கிரஸ் தொண்டர்களுக்காக பாவப்படுவதாகவும் காயத்ரி ரகுராம் ட்வீட்டியுள்ளார்.

போராட்டம்
மக்களின் போராட்டத்தால் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது. ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் அதனால் தான் பெரிய ஆட்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் பத்திரமாக இருந்து கொண்டு அப்பாவி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

துரோகம்
நம் மக்கள் நம்பிய திராவிடக் கட்சிகள் நம் முதுகில் குத்திவிட்டன என்பதை ஏற்றுக் கொள்வது கடினம். எல்லாம் அரசியல் படுத்தும் பாடு என்கிறார் காயத்ரி.

மோடி
தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி அரசு எதுவுமே செய்யாமல் இருப்பதை பற்றி பேசாமல் அடுத்தவர்கள் மீது குறை சொல்வது மட்டும் தான் உங்களுக்கு முக்கியம் காயத்ரி என்கிறார்கள் நெட்டிசன்கள்.

Tags:Sterlite protest thoothukudi gayathri raghuram,Sterlite protest thoothukudi gayathri raghuram