​பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு!

0
756
Nirmaladevi Jamini Gori petitioned professor

Nirmaladevi Jamini Gori petitioned professor

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை, தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனெவே இவர்களது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது, என தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :