முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

0
381
money former Prime Minister Najib, malaysia tami news, malaysia, malaysia news, Najib,

{ money former Prime Minister Najib }

மலேசியா: பொதுத்தேர்தல் மற்றும் கட்சியின் நிர்வாகத்திற்காக வழங்கப்பட்ட நிதியைப் பறிமுதல் செய்திருக்கும் போலீசின் நடவடிக்கைக் குறித்து அம்னோ வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் வியூக தொடர்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அம்னோவின் புதிய தலைமைத்துவத்திடம் அந்த பணத்தை கொண்டு சேர்க்கும் நடவடிக்கையின் போது அந்த பணத்தை போலீஸ் பறிமுதல் செய்துள்ளதாக அதில் கூறியுள்ளது.

பொதுத்தேர்தலுக்கான நிதி உள்பட கட்சியை வழிநடத்துவதற்கான நிதி மற்றும் நிதி வளங்களை பெறுவதற்கான பொறுப்பு அம்னோவின் தலைவருக்கு உள்ளது. கட்சியின் சட்டவிதியில் இதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் இத்தகைய நிதிகளை பெறுகின்றன. இதில், அம்னோ மட்டும் விதிவிலக்கு அல்ல. அம்னோவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் கட்சியை வழிநடத்துவதற்காகவும் இந்த நிதியுதவியை பெற்றுள்ளார்.

அம்னோவின் முன்னாள் தலைவரான துன் டாக்டர் மகாதீரும் தேசிய தலைவர் பதவியிலிருந்து விலகும் போது 120 கோடி வெள்ளி நிதியை கட்சிக்கும் 30 லட்சம் உறுப்பினர்களுக்கும் வழங்கி சென்றுள்ளார்.

நாட்டின் சட்டவிதியின் கீழ் அரசியல் நிதியுதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த நிதியை அம்னோ தலைமைத்துவம் போலீஸின் விசாரணை முடிவுற்ற பிறகு திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமென அம்னோவின் வியூக தொடர்பு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: money former Prime Minister Najib

<< RELATED MALAYSIA NEWS>>

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!

*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

<<Tamil News Groups Websites>>