பிரான்ஸில் காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
225
Missing children increase France

கடத்தப்படுகின்ற அல்லது காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. Missing children increase France

கடந்த 2016ம் ஆண்டு 687 சிறுவர்கள் காணாமல் போன நிலையில், 2017ம் ஆண்டில் 1,328 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 49,422 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

‘116,000 காணாமல் போன சிறுவர்கள்!’ எனும் பெயருடைய தனியார் தொண்டு நிறுவனம் இந்த காணாமல் போன சிறுவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது. மிக கவலையளிக்கக்கூடிய நிலையில், எவ்வித தகவல்களும் கிடைக்கப்படாத நிலையில் 1,328 சிறுவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2016ம் ஆண்டை விட இரண்டுமடங்காகும்.

கடத்தப்படுகின்ற அல்லது காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாக அவ் அமைப்பின் தலைவர் Anne Larcher, கவலை தெரிவித்துள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**