மனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் : கண்டியில் பதறவைக்கும் சம்பவம்

0
683
husband killed wife front sons kandy

(husband killed wife front sons kandy)
பிள்ளைகளின் கண் எதிரே தனது மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலாதிவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான பிரித்திகா யமுனா என்ற தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

தனது இரண்டாவது மகனை பாடசாலையில் இருந்து குறித்தப் பெண் அழைத்து வந்துள்ளார்.

இதன் போது வீட்டில் இருந்த 44 வயதுடைய கணவர் மனைவியுடன் முரண்பட்டுள்ளார்.

பின்னர் இருவருக்கும் வாய்த்தர்க்கம் அதிகமாக ஆத்திரமடைந்த கணவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் தலையில் குத்தியுள்ளார்.

இந்த சம்பவம் பிள்ளைகளின் கண் எதிரே இடம்பெற்றுள்ளது.

பின்னர் கணவன் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :