​குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்!

0
832
horror killed grandmother not pay money

horror killed grandmother not pay money

திருப்பாலைவனம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கமல், குடிக்க பணம் கேட்டு தனது பாட்டி மணிமேகலையை அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல் குடிபோதையில் தகராறு செய்த கமல், ஆத்திரத்தில் பாட்டியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்றார். தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸார் மூதாட்டியின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், கமலை கைது செய்து பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

More Tamil News

Tamil News Group websites :