வித்தியாசமான சுவையான நெத்திலி மீன் குழம்பு…

0
544
Delicious anchovy fish curry

(Delicious anchovy fish curry)

எத்தனைவகை  மீன்குழம்பு  வைத்து  சாப்பிட்டாலும்  நெத்திலிமீன் தனிச்சுவைதான். பெரும்பாலும் மீன் குழம்பு, மீன் பொரியல் மட்டுமே சாப்பிட்டு  நிறைய பேருக்கு அலுத்துப் போயிருக்கும்.  மீனை வைத்து வேறு என்ன வித்தியாசமாக செய்யலாம்,  என்று யோசிப்பவர்ளுக்காகவே  இந்த  சுவையான நெத்திலி குழம்பு. வாங்க நெத்திலி குழம்பு எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் – அரை கிலோ
வெங்காயம் – 1௦௦ கிராம் (நறுக்கியது)
தக்காளி – 1௦௦ கிராம் (நறுக்கியது)
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 6 பல்
புளி – சிறிதளவு
தனியாதூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை
நெத்திலி மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
அடுத்ததாக , ஒரு பாத்திரதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், வெங்காயம், தக்காளி இவற்றை ஒன்றன் பின்ஒன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கிய பிறகு , மிளகாய் தூள், தனியாதூள், போதுமான உப்பு சேர்த்து புளிநீர் கொதித்ததும், நெத்தியை  போட்டு  குறைந்த சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
காரசார மணமான நெத்திலி குழம்பு, தயார் இதை சூடான.
tags:-Delicious anchovy fish curry
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

வதைச் செயல் காணொளிகள் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை