​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

0
759
Court orders release 65 arrested Tuticorin peoples

Court orders release 65 arrested Tuticorin peoples

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, தூத்துக்குடியில் போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, 65 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட கூட்டமாக வழக்கறிஞர்கள் குவிந்திருந்தனர்.

இதனையடுத்து மேலும், காவல்துறையினர் தாக்கினார்களா, இல்லையா என்றும் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பிறகு இருதரப்பு வாதங்களையும் கேட்டரிந்த நீதிபதி சாருஹாசனி கூறியதாவது, கைது செய்யப்பட்ட 65 பேரையும் அவர்களது சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.

More Tamil News

Tamil News Group websites :