பிரிட்டிஷ் ஒருவரை பலியெடுத்த பிரெஞ்சு மலை!

0
156
British body found French Alps

பிரஞ்சு ஆல்ப்ஸ் மலையில் காணாமற் போன ஒருவரின் சடலம் சிதைவடைந்த நிலையில், கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குறித்த சடலம் பிரிட்டிஷ் ஐச் சேர்ந்த, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒருவரின் சடலம் என பிரெஞ்சுப் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். British body found French Alps

Lincolnshire பகுதியைச் சேர்ந்த 39 வயதான John Bromell என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை கடந்த ஜனவரி 7 அன்று Tignes இலுள்ள Paquis chairlift இல் கடைசியாக கண்டதாக கூறப்படுகிறது.

Bromell காணாமல் போன நேரத்தில், பனி 3ft க்கும் மேற்பட்ட அளவில் காணப்பட்டதாகவும், அவலாஞ்சி மலைத் தொடரில் ஆபத்திற்கான எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

அவர் காணாமற்போனதன் பின்னர் பிரெஞ்சு பொலிஸார், அந்த ஆபத்தையும் கணக்கிலெடுக்காது ஒரு முழு அளவிலான தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் அச்சமயம் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**