6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!

0
987
6000 Chinese nationals now lives sri lnakan

(6000 Chinese nationals now lives sri lnakan)
இலங்கையில் 6000 இற்கும் அதிகமான சீனர்கள் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களைக் கையாளும், அதிகாரியான யாங் சூயுவான், இதுபற்றித் தகவல் வெளியிடுகையில்,

“இலங்கை – சீன கூட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதிலேயே பெரும்பாலான சீனர்கள், ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், நெடுஞ்சாலைத் திட்டங்கள், மற்றும் வானுயர்ந்த கட்டடங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளிலேயே பெரும்பாலும் சீனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சீன- இலங்கை கூட்டுத் திட்டங்களில் தொடர்புடைய சீன நிறுவனங்கள், சீனப் பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :