{ 5 Foods Delighting Night Sleep }
இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.
செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது.
இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் என்கின்ற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள். அதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்தில் அதிகம் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கின்ற அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் அதிகம் இருக்கின்றது.
இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP ஒரு என்கின்ற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
டோஸ்ட்:
நாம் பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகின்ற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதாவது மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.
ஓட்ஸ் கஞ்சி:
ஓட்ஸ் கஞ்சி ரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படும்.
கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம் இன்றைக்கு பார்த்த மேலே இருக்கின்ற 4 உணவுகளுமே புதுசுதான். ஆனா பால் மட்டும் பழசு. அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கல்சியம் இருப்பது உறக்கத்தைத் தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
Tags: 5 Foods Delighting Night Sleep
<< RELATED HEALTH NEWS >>
*காலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..?
*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…!
*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…!
*உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!