144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது – ஸ்டாலின் கேள்வி!

0
880
144 apply prosecution chief minister - Stalin's question

காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். 144 apply prosecution chief minister – Stalin’s question

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடே இன்று போராட்டக்களமாக மாறியிருக்கிறது. பணம் இருந்தால் போதும் குதிரை பேரம் மூலம் யாராக இருந்தாலும் முதலமைச்சராக ஆகலாம். மேலும் நேற்று திமுக நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார் என்று கூறினார்.மேலும், ஆட்சியில் இருப்பவர்கள் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை விரைவில் நாடு அறியும். திமுக நடத்துவது நாடகம் என்றால், அதிமுக நடத்துவது கபட நாடகம். மிசா சட்டத்தை திமுகவினர் சந்தித்துள்ளனர். வழக்குகளை கண்டு எங்களுக்கு கவலையில்லை. மேலும் தமிழகத்தில் சிறை போதாது என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபடும் திமுகவினரை சிறையில் அடைப்பது இல்லை. மேலும் சிறை செல்ல திமுகவினர் என்றும் தயங்கியதில்லை. நாங்கள் ஒன்றும் ஊழல் செய்து சிறைக்கு சென்றவர்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், 144 தடை உத்தரவு முதலமைச்சருக்கு பொருந்தாது என்றும், இந்த அடிப்படை விஷயம் கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் தாக்கியதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதலமைச்சர் ஏன் கூறினார் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதே நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் ஆட்சியாளர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று அவர் கடுமையாக கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மணமக்களுடன் ஸ்டாலின் சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து செய்வதறியாமல் தவித்த போலீசார், அவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

More Tamil News

Tamil News Group websites :