தமிழின உணர்வுகளை புரிந்துகொள்ளாத தனியார் வங்கி தமிழர் பிரதேசங்களில் தேவைதானா?

0
1200
Kilinochchi Hatton National Bank Mullivaikkal Remembrance Day Issue

(Kilinochchi Hatton National Bank Mullivaikkal Remembrance Day Issue)

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வங்கிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பிரதான வியாபார இலக்கு பகுதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாற்றம் பெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு போன்ற தமிழர் பிரதேசத்தில் மூலைக்கு மூலை தமது வியாபார நிறுவன கிளைகளை திறந்து வைத்து தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இவற்றில் ஒன்று தான் ஹட்டன் நஷனல் வங்கி எனப்படும் தனியார் வங்கியும்.

தமிழ் மக்களின் மூலம் இலாபமடைந்து வரும் இந்த வங்கிக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ் மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் மகத்துவத்தை சிதைக்கும் வண்ணம் , அதன் எதிர்கால முன்னெடுப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வண்ணம் மிகவும் கேவலமான நடவடிக்கை ஒன்றை இந்த தனியார் வங்கி செய்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று கிளிநொச்சியிலுள்ள
இந்த தனியார் வங்கி கிளையில் , அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர்.

இந்த நினெவேந்தல் படங்களைக் கண்ட பேரினவாத கும்பல் கொடுத்த அழுத்தத்தின் பிரகாரம் , கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் படி வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் சக ஊழியர் பதவி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு வங்கி கூறியுள்ள காரணம் , விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்து நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளனர் என்பதன் காரணமாகவே தாம் இந்த முடிவுக்கு வந்தார்கள் என கூறியுள்ளார்கள்.

ஆனால் வங்கியின் இந்த கூற்று மூலம் கூறப்படுவது என்ன?

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த வங்கி கிளை வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திட்கு உட்பட்ட பகுதியில் இருந்தே இயங்குகிறது, இந்நிலையில் வடக்கு மாகாண சபை முன்னெடுத்த நினைவேந்தல் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு எப்படி பாதிப்பு எட்டப்படும் என வங்கியின் தலைமை முடிவெடுத்தது.

அதுமட்டுமன்றி , தீபாவளி , பொங்கல் , வெசாக் என பலதரப்பட்ட கலாச்சார சமூக விடயங்களை கொண்டாடும் ஒரு வங்கி கிளை தமது உறவுகளை நினைவுகூறும் பிரதான சமூக நிகழ்வான நினைவேந்தலை செய்யக்கூடாது என தடைவிதிக்க எத்தகைய அதிகாரத்தை கொண்டுள்ளது?

மேலும் முள்ளிவாய்கால் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள குறித்த தனியார் வங்கி உட்பட வடபகுதியி்லுள்ள ஏனைய வங்கிகளிலும் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழமை.

ஆனால் இம்முறை மட்டும் எப்படி அது நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தது என்று இந்த வங்கியால் கூற முடியுமா?

இதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும்?

குறித்த தனியார் வங்கியின் இந்த பேரினவாத ஆதரவு போக்கு நிச்சயம் எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பிழையான கருத்தை உருவாக்கும். இந்த தன்மையை ஏனைய வங்கிகளும் பின்பற்ற தொடங்கும். இதன் மூலம் நினைவேந்தல் செய்வதே பெரும் குற்றம் என்னும் நிலைப்பாடு எட்டப்படும்.

குறித்த வங்கியின் இது போன்ற இனவாத ஆதரவு தன்மையை முளையில் கிள்ளி எறிவதே உசிதம். எமது தமிழ் மக்களின் பணத்தை வைத்து இலாபமீட்டும் வங்கிக்கு எமது மக்களை நினைவு கூறல் என்பது குற்றமாக தெரிகிறது என்றால் பாரபட்சமின்றி அந்த வங்கியை புறக்கணிப்பு செய்யுங்கள்.

இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மானமுள்ள தமிழர்கள் உடனடியாக உங்கள் கணக்கை மூடி வங்கிக்கு உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். இதுவே இந்த வங்கிக்கும் எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கையில் இறங்கும் எந்த நிறுவனத்துக்கும் நல்ல பாடமாக அமையும்.

எமது இனத்தின் இரத்தத்தை உறிஞ்சி வயிறு வளர்க்கும் இந்த மாதிரியான பேரினவாத நிறுவனங்களின் முகமூடி தரித்த முகத்தில் ஓங்கி அறைந்து எம் இனத்தின் உணர்வுகளை நிலைபெற செய்வது கூட அவசியமான போராட்டமே.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு