உபாதை காரணமாக கவுண்டி போட்டிகளை தவறவிடும் கோஹ்லி!

0
494
virat kohli county cricket surrey news Tamil

(virat kohli county cricket surrey news Tamil)

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, கவுண்டி கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு முதற்தர போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, அங்குள்ள காலநிலை மற்றும் ஆடுகளங்களில் பயிற்சிகளை பெறுவதற்காக கவுண்டி அணியான சர்ரே அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதில் இரண்டு முதற்த போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது கோஹ்லி இரண்டு முதற்தர போட்டிகளில் மாத்திரம் விளையாடுவார் எனவும் பின்னர் அயர்லாந்து தொடருக்காக செல்லும் இந்திய அணியுடன் இணைந்துக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

கோஹ்லியின் ஹெர்னியேட்டட் டிஸ்க்கில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக கவுண்டி போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் உபாதை பெரிதாக இல்லாத போதும் கோஹ்லியை ஓய்வில் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் ஜுன் மாதத்தில் இருந்து இவ்வருடம் மே மாதம் வரையில் விராட் கோஹ்லிக்கு ஏற்பட்டுள்ள வேலைப் பளு காரணமாக அவருக்கு ஓய்வு தேவை எனவும், சர்வதேச போட்டிகளில் கோஹ்லி பங்கேற்க வேண்டும் என்பதற்காக, குறித்த கவுண்டி போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.

கோஹ்லி மேற்குறிப்பிட்ட கால எல்லைக்குள் , ஐ.பி.எல். தொடர் உட்பட 61 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இந்திய அணிக்காக 9 டெஸ்ட், 29 ஒருநாள் மற்றும் 9 இருபதுக்கு-20 போட்டிகள் என 47 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரை விட இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மாத்திரமே 48 போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஏனைய வீரர்கள் இதனைவிட குறைவான போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

virat kohli county cricket surrey news Tamil