ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

0
824
tamilnews Red warning issued five districts unusual climate Sri Lanka

(tamilnews Red warning issued five districts unusual climate Sri Lanka)

இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அந்த வகையில், இரத்தினபுரி, கேகாலை, நுவரேலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews Red warning issued five districts unusual climate Sri Lanka)

More Tamil News

Tamil News Group websites :