இயற்கை அனர்த்த பாதிப்புகளை ஈடுசெய்ய 89 மில்லியன் உடன்படிக்கை கைச்சாத்து

0
488
tamilnews australiya aid unisef nature disaster helpline project

(tamilnews australiya aid unisef nature disaster helpline project)

உலக உணவு திட்டம் மற்றும் யுனிசெப் ஆகியன இணைந்து எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு (2018 – 2020) முழு வேலைத்திட்டங்கள் அடங்கிய உடன்படிக்கை ஒன்றில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அவுஸ்ரேலிய அரசாங்கம் 89 மில்லியன் ரூபா நிதி (AUD 750,000) அடங்கிய உடன்படிக்கையே அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

வெள்ளம், கடும்காற்று, வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் முக்கிய நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலகளாவிய காலநிலை மாற்ற தரவுகளுக்கு அமைவாக இலங்கை இந்த பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ளது.

இதற்கமைவாக இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருணாகலை, புத்தளம், அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் இந்த சவால்களை எதிர்கொள்ளும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களின் முன்னெச்சரிக்கைக்கான நடவடிக்கைகளை அதிகரித்தல், சிரமங்களை குறைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உதவும் வகையிலேயே உலக உணவு வேலைத்திட்டம் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

(tamilnews australiya aid unisef nature disaster helpline project)

More Tamil News

Tamil News Group websites :