stalin shot arrested now chennai secretariat
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது, பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியபோது, தூத்துக்குடி நகரமே அங்கு கொந்தளிப்பாக இருக்கிறது, காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் ஏதோ பெயருக்காக இடம் மாற்றம் செய்துள்ளனர், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் தூத்துக்குடியில் இவ்வளவு சம்பவம் நடைபெற்றும் முதலமைச்சர் அங்கு சென்று நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை, இந்த அரசு செயலற்ற நிலையில் இருக்கிறது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு நன்கு பயிற்சி எடுத்த அதிகாரிகளை வைத்து இச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர், எந்த ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என அவர் கூறினார்.
மேலும் இது குறித்து முதல்வரை நேரில் சந்திக்க தலைமைச் செயலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களையும் போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.
மேலும் தர்ணாவில் ஈடுபட்டு சாலைமறியல் செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களை போலீஸார் கைது செய்தனர்.
More Tamil News
- முதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா!
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!
- ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு!
- தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்!
- ஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!
- போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்வதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்!