நாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை

0
893
Flooding across country No water Inginiyagala

(Flooding across country No water Inginiyagala)
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கடும்மழை பெய்து வருகின்ற நிலையில், வெள்ளப்பெருக்கினால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டு, உயிர் சேதம் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்திற்கு போதிய மழை வீழ்ச்சி இல்லாமையால் அங்குள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இங்கினியாகலை சேனநாயக்க நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் துசித பீ வணிகசிங்க தெரிவித்துள்ளார்.

சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்தாங்கும் பகுதிகளுக்கு குறைந்தளவு மழைவீழ்ச்சி கிடைத்திருந்த போதிலும், நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கினியாகலை சேனநாயக்க நீர்தேக்க நீரின் முழுக் கொள்ளளவு ஏக்கர் அடி 777,000 என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நீர் மட்டம் ஏக்கர் அடி 150.000 என்றாலும் பல போகத்தில் வயல்களுக்கு நீர் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நீர்த்தேக்கத்தினால் 125,000 ஏக்கர் வயல் நிலத்தில் பயிரிடப்பட்டு வரும் நிலையில், இந்த முறை 40,000 ஏக்கர் வயல் நிலம் மாத்திரமே பயிர்டப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த போகத்தில் 15,000 விவசாய குடும்பங்களுக்கு வயலில் பயிரிட முடியாமல் போகும் நிலை ஏற்படும் என்றும் கல்லோயா திட்ட மேலாளர் கிரிஷ் டி தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் போகத்தில் 15,000 விவசாய குடும்பங்களுக்கு நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாசாயக்க தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Flooding across country No water Inginiyagala