ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..!

0
458
20 Movie Trailer coming soon,20 Movie Trailer coming,20 Movie Trailer,20 Movie,20

(20 Movie Trailer coming soon)

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரூ.400 கோடி மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் “2.0”.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட இப் படத்தின் படப்பிடிப்பை 2015 டிசம்பரில் தொடங்கி கடந்த வருடம் முடித்தனர்.

அதன்பிறகு டப்பிங், கிராபிக்ஸ், ரீரிக்கார்டிங் பொன்ற தொழில் நுட்ப பணிகள் நடந்தன. வெளிநாட்டு ஸ்டூடியோக்களில் கிராபிக்சை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக செய்துள்ளனர்.

இந்திய அளவில் கிராபிக்ஸ் மிரட்டலில் அதிகம் பேசப்பட்ட படம் பாகுபலி. அதை மிஞ்சும் அளவுக்கு 2.0 இருக்கும் என்கின்றனர். இதன் பாடல்களை சில மாதங்களுக்கு முன்பு துபாயில் ஆடம்பர விழா நடத்தி வெளியிட்டனர். 2.0 படமான வீடியோக்களையும் இயக்குனர் ஷங்கர் அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

மேலும், படத்தின் சில நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை வெளியிட்டது யார் என்று விசாரித்து கண்டுபிடித்துள்ளதாக தகவல்.

இரு மாதங்களுக்கு முன்பே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து வெளிநாட்டு நிறுவனங்கள் கிராபிக்ஸ் வேலைகளை முடிப்பதில் தாமதம் செய்ததால் தள்ளிவைத்தனர்.

அதற்கு பதிலாக ரஜினியின் இன்னொரு படமான காலாவை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். முதலில் இந்த படத்தை 2.0-க்கு பிறகுதான் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

தீபாவளிக்கு 2.0 தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் விஜய், அஜித்குமார் படங்களும் தீபாவளியை குறிவைப்பதால் அதற்கு முன்பே 2.0 வெளிவரும் என்று தெரிகிறது.

இந் நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்த ”2.0” படத்தின் ட்ரெய்லர் தயாராகி உள்ளது.

ஆனால், மும்பை வாங்கடே மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை அணி மோதும்போது ட்ரெய்லரை வெளியிடலாமா? என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

கல் முள் வீதியில் ஓடும் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” பட டீம்..!

ரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி..? : மனம் திறந்த தீபிகா படுகோனே..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-20 Movie Trailer coming soon

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 24-05-2018