முரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு

0
483
tamilnews gun bullets boxes catch kilinochi murasumottai
(tamilnews gun bullets boxes catch kilinochi murasumottai)

முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியை அண்மித்த பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பது ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத்தில் தகரம் ஒன்று இருப்பதனை அவதானித்து அகற்ற முயன்ற பொழுது துப்பாக்கி ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை அவதானித்த அவர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

கிராம சேவையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து பொலிஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கிராம சேவையாளர் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் இன்று பிற்பகல் அகழ்வினை மேற்கொண்டனர்.

இதன்போது, ரி 56,12.7 துப்பாக்கிகளின் ரவைகள் அடங்கிய 40 ரவைப் பெட்டிகளை மீட்டுள்ளனர்.

(tamilnews gun bullets boxes catch kilinochi murasumottai)

More Tamil News

Tamil News Group websites :