தமிழ் நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொலிஸின் காட்டுமிராண்டித்தனம். அராஜகத்தின் உச்சம்

0
806

(Tamil nadu Sterlite Protest Police Shoot Eleven People Died)
தமிழகத்தில் நடைபெறுவது நல்லாட்சியா? அல்லது இராணுவ ஆட்சியா? என்று சிந்திக்க வைக்கும் அளவு கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியிருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடந்த்தியிருந்தனர். 100 நாட்களாக நடந்த போராட்டத்திற்கு எந்த ஒரு ஊடகமும் திரும்பியும் பார்க்காத நிலையில், போராட்டத்தின் நூறாவது நாளான நேற்றைய தினம் மக்கள் அனைவரும் ஓன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட வேளை இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஆரம்பித்தது.இதனால் போராட்டத்தை கலைப்பதாக எண்ணி, உருக்கொண்ட தமிழ்நாட்டுப் பொலிஸ் தனது காட்டுமிராண்டித்தனத்தைக் காட்ட ஆர்மபித்தது. கண்மூடித்தனமாக பொது மக்களை சுட்டு கொன்றனர்.அராஜக போதையில் இருந்த தமிழ் நாட்டு பொலிஸ், தொலைவில் இருந்து சுட்டு அளிக்க கூடிய ஆயுதங்களால் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவிப் பொது மக்களை சுட்டுப் பொசுக்கியது.

இது சம்பந்தமான நெஞ்சை பதற வைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனிடையே, போராட்டம் மேலும் வலுவடைந்து செல்கையில் மேலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.மேலும், தூத்துக்குடியில் பொலிஸார், மக்களின் வீடுகளுக்கு சென்றும் தேடுதல் வேட்டையில் இருப்பதாகவும் அங்கே மிகுந்த பதற்றம் நிலவுவதாகவும் தெரியவருகிறது.இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தமிழ் நாட்டில் அரங்கேறி வருவது தமிழ் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள அதே வேளை, தமிழ் நாட்டின் அரசியலே ஒரு இஸ்திரமற்ற நிலையில் தள்ளாடி வரும் நிலையில் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்படும் மக்களுக்கு யார் தான் பதில் சொல்வார்களோ?

தமிழனுக்கு தமிழனே எதிரியாகும் நிகழ்ச்சிகள் தற்போது ஆரம்பித்திருப்பது, எமக்காக ஒரு நேர்மையான தலைவன் இல்லாத குறையை பறைசாற்றிச்செல்கிறது.Tag: Tamil nadu Sterlite Protest Police Shoot Eleven People Died