11,000 இலங்கை சிறுவர்கள் விற்பனை; அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலம்

0
808
Stolen children SriLanka sell European countries

(Stolen children SriLanka sell European countries)
இலங்கையில் இருந்து சிறுவர்களை திருடி ஐரோப்பா நாடுகளுக்கு விற்கப்படும் பெரும் மோசடிச் சம்பவம் தொடர்பில் சுவிஸ் பெடரல் (Swiss Federal Court) நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து 11,000 சிறுவர்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் சிறுவர்களை திருடி விற்கும் வியாபாரத்தின் தலைவி அலிஸ் கெனிகூர் என்ற பெண்ணை சுவிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் மோசடி செயற்பாட்டிற்கு கொழும்பிலுள்ள தமிழ் சட்டத்தரணிகளும் உடந்தை என்றும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடிக்கு அரச சார்ப்பற்ற அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவருக்கும் தொடர்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Stolen children SriLanka sell European countries