உடலுறவால் இப்படியொரு நன்மையா? : முதல் முறையாக வெளிவந்த உண்மை

0
2291

Sexual Relationship Benfits

உடலுறவினால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். மன அழுத்தத்தை போக்குதல், சில நோய் நிலைகளை தடுத்தல் என பலவற்றைக் கூறமுடியும்.

இந்நிலையில், உடலுறவானது நடுத்தர வயதானோருக்கு தமது ஞாபக சக்தியை மேம்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாவியை எங்கே வைத்தோம், பணப்பை எங்கே என ஞாபக மறதியால் அவதிப்படுவோருக்கு சிறந்த தீர்வாக பாலுறவு அமைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலுறவில் நாட்டமுள்ள தம்பதிகள், நினைவாற்றலில் சிறந்து விளங்குவதாக ஆராய்ச்சியில் உறுதியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய வொலொன் கொங் பல்கலைக்கழகத்தின் நீண்ட ஆராய்ச்சியிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உறவு அடிக்கடி இடம்பெற வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 2 வருடகாலமாக 6,000 பேரில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னரே இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

.