கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்

0
1587
mother recovered cage colombo galkissa

(mother recovered cage colombo galkissa)
86 வயதுடைய வயோதிப தாய் ஒருவரை கூண்டுக்குள் அடைத்து வைத்த கொடூர சம்பவமொன்று கொழும்பு, கல்கிஸ்ஸ கல்வலபார பகுதியில் பதிவாகியுள்ளது.

4 பிள்ளைகளின் தாயான வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த தாயை மீட்டு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நான்கு பிள்ளைகளின் தாயான இவர், 4 அடி அகலமும், 5 அடி நீளமுமான பலகை மற்றும் சீமெந்து கற்கலினால் அமைக்கப்பட்ட சிறிய கூடொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாயின் மகளொருவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியிலேயே இந்த தாய் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு நலன் கருதியே தாயை இவ்வாறு கூண்டுக்குள் அடைத்து தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக மகள் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :