35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்

0
2095
kandy anuradhapura bus sad incident

(kandy anuradhapura bus sad incident)
அநுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் நேற்று சோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி தனியார் சொகுசு பஸ் ஒன்று வழமைபோன்று தனது பயணத்துதை நேற்று மாலை ஆரம்பித்துள்ளது.

குறித்த சொகுசு பஸ், மஹவெல கவுடுபெலெல்ல பிரதேசத்தை அண்மித்த போது, சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தனக்கு ஏற்பட்ட மரண வேதனையை கட்டுப்படுத்தி கொண்டு அதிவேகமாக பயணித்துகொண்டிருந்த பஸ்ஸை சாரதி பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.

உடனடியாக பஸ்ஸில் பயணித்தவர்கள் சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல முற்பட்ட போதும், சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அநுராதபுரம் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஒருவேளை சாரதியால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தால் பாரிய பள்ளதில் வீழ்ந்து பஸ் விபத்துக்குள்ளாகி இருக்கும் என பயணிகள் கவலையோடு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:kandy anuradhapura bus sad incident,kandy anuradhapura bus sad incident,