17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

0
2453
mother daughter bath river missing recover body Tamil latest news

(17 year old student missing)
கிங் கங்கையில் விளையாட்டாக குதித்த பாடசாலை மாணவரொருவர் காணாமல் போயுள்ளார்.

வென்னப்புவ லுணுவில பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாதுர டில்ஷான் என்ற மாணவரொருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மாணவன் கிங் கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்ப்பதற்காக சக மாணவர்களுடன் சென்றுள்ளார்.

குறித்த மாணவர் திடீரென நீரில் குதித்துள்ளதை தொடர்ந்து மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை தேடிய போதிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தற்பொழுதைய காலகட்டத்தில் நீர் நிலைகளின் அருகில் வாழும் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 17 year old student missing