எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை

0
802
Sri Lanka Johann Peiris successfully summits Mount Everest

(Sri Lanka Johann Peiris successfully summits Mount Everest)
இலங்கையை சேர்ந்த ஜோன் பீரிஸ் என்பவர் நேபாளிய நேரத்தின்படி இன்று காலை 5.55 மணியளவில் உலகத்தின் மிக உயர்ந்த மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார்.

இவரது இரண்டாவது முயற்சியினாலேயே இவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளார்.

அத்துடன், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் இவர் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இலங்கையைச் சேர்ந்த ஜயந்தி குரு உதும்பால என்பவர் மே மாதம் 21 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு உள்ளூர் நேரத்தின்படி, காலை 5 மணியளவில் உலகின் அதி உயரமான மலையான எவரெஸ்ட் மலையின் (29,029 அடி) உச்சியை சென்றடைந்தார்.

அதேதினத்தில்,  ஜொஹான் பீரிஸ் மலை உச்சியை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதி சிறந்த உயர்நிலையான 27,559 அடி உயரத்தை சென்றடைந்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Sri Lanka Johann Peiris successfully summits Mount Everest