சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை!

0
1509
Parents lost son road accident committed suicide

Parents lost son road accident committed suicide

நாமக்கல் மாவட்டம் ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் – சுதா தம்பதியினர், இவர்களது ஒரே மகனான நிசாந்த் என்பவர் தனது உறவினரான கிருபாகரனுடன் கோவையிலிருந்து நாமக்கல் நோக்கி நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர், அதே நேரத்தில் கோவையிலிருந்து ஈரோட்டிற்கு பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரத்தை ஏற்றி வந்த ஆட்டோ அவிநாசி பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் வரும்பொழுது ஆட்டோவில் இருந்த இயந்திரம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது, அந்த இயந்திரத்தை மீண்டும் ஆட்டோவில் ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்த போது நிஷாந்தின் இருசக்கர வாகனம் இயந்திரம் மீது மோதி விபத்துக்குள்ளானது, அதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உரிழந்தனர்.

இந்நிலையில் அவிநாசி அரசு பொது மருத்துவமனையில் நிஷாந்தின் பிரேதத்தை அடையாளம் காட்ட வந்த அவரது பெற்றோர் சக்தியும் சுதாவும் அவர்களது ஒரே மகனை பறிகொடுத்த துக்கம் தாளாமல் அன்றிரவு அரசு பொது மருத்துவமனையில் குளிர்பானம் ஒன்றை வாங்கி அதில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

More Tamil News

Tamil News Group websites :