எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

0
814
najeeb come sprm explaining, malaysia tami news, malaysia, malaysia news, najib,

{ najeeb come sprm explaining }

மலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு விளக்கமளிப்பதற்காக இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) தலைமையகத்திற்கு வந்துள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நஜீப் டொயோட்டா வெல்பையர் காரில் காலை மணி 9.42 அளவில் அங்கு வந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்.பி.ஆர்.எம்.தலைமையகத்திலுள்ள விசாரணை நடத்தும் அறைக்குள் நஜீப் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார் என தெரிகின்றது.

காலை மணி 8.00 அளவில் நஜீப் மீதான விசாரணை குறித்து செய்தி சேகரிப்பதற்காக உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, எஸ்.பி.ஆர்.எம்.மின் புதிய தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் காலை மணி 11.30 அளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜீப் மீது எஸ்.பி.ஆர்.எம். விசாரணையை மேற்கொள்ளவுள்ளது அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: najeeb come sprm explaining

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

<<Tamil News Groups Websites>>