சீரற்ற காலநிலை எவ்வளவு காலம் நீடிக்கும்? : முழுமையான தகவல் இதோ

0
793
How long extreme weather

(How long extreme weather )
தென் மேல் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட­ளா­விய ரீதியில் பல பகு­தி­க­ளிலும் அடை மழை பெய்­து­வரும் நிலையில், அம்­ம­ழை­யுடன் கூடிய காலநிலை­யா­னது மே மாதம் இறு­தி­வரை தொடரும் என கால நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

தற்­போது பெய்யும் மழை­யா­னது இன்­றைய தினம் சற்று குறை­வ­டையும் எனவும், எனினும் நாளை மறுதினம் முதல் மீள அதி­க­ரிக்கும் எனவும் கால நிலை அவ­தான நிலைய பிரதிப் பணிப்­பாளர் மெரில் மெண்டிஸ் தெரி­வித்தார்.

அதன்­படி மேல், சப்­ர­க­முவ, தென், மத்­திய மற்றும் வட மேல் மாகா­ணங்­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும் எனவும் ஏனைய பகு­தி­களில் பிற்­பகல் 2 மணியின் பின்னர் இடி­யுடன் கூடிய மழையை எதிர்ப்­பார்க்­கலாம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

சப்­ர­க­முவ மாகா­ணத்தில் சில இடங்­களில் 150 மி.மீ அள­வான மிகப் பலத்த மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­துடன் மேல், மத்­திய மற்றும் ஊவா மேல் மாகா­ணங்­க­ளிலும் காலி மற்றும் மாத்­தறை மாவட்­டங்­க­ளிலும் 100 மி.மீற்றருக்கும் அதி­க­மான பலத்த மழை­வீழ்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இடி­யுடன் கூடிய மழை பெய்யும் வேளை­களில் அப்பிர­தே­சங்­களில் தற்­கா­லி­க­மாக பலத்த காற்றும் வீசக்­கூடும் என தெரி­விக்கும் கால நிலை அவ­தான நிலையம் மின்னல் தாக்­கங்­க­ளினால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை குறைத்­துக்­கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

8 மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

நாட­ளா­விய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் பதி­வான மழை­வீழ்ச்சி 75 மில்­லி­மீற்­றரைத் தாண்­டி­யுள்­ளதால் 8 மாவட்டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்­கை­யினை தேசிய கட்­டிட ஆராய்ச்சி நிறு­வனம் விடுத்­துள்­ளது.

அதற்­கி­ணங்க கேகாலை, இரத்­தி­ன­புரி, குரு­நாகல்,பதுளை, கண்டி, மாத்­தளை, கொழும்பு, கம்­பஹா ஆகிய மாவட்­டங்­க­ளுக்கே மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

களுத்­து­றைக்கு மண் சரிவு தொடர்பில் சிவப்பு அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தவிர கொழும்பு – அட்டன் பிரதான வீ­தியில் சிறு சிறு சரி­வுகள் பதி­வா­கின. இரத்­தி­ன­பு­ரியில் அய­கம, நிவித்­தி­கல, கொலன்ன, கல­வான, கிரி­எல்ல, பெல்­ம­துளை, காவத்தை ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­ப­கு­தி­களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வா­கு­மி­டத்து மண் சரிவு அனர்த்தம் ஏற்­படும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

மண்­ச­ரி­விற்­கான முன் அறி­கு­றிகள் தென்­படும் இடங்­க­ளி­லுள்­ள­வர்கள் உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறும், மேற்­சொன்ன மாவட்­டங்­களில் தொடர்ந்தும் மழை­பெய்­யு­மாக இருந்தால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு ஆயத்தமாக இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மக்களை வேண்டிக்கொண்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை