பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் கலந்துரையாடல்

0
607
Discussion led Prime Minister ranil wickramasinghe Temple Trees

(Discussion led Prime Minister ranil wickramasinghe Temple Trees)
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிவாரணங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் இதன்போது விளக்கமளித்தனர்.

தொடரும் மழை காரணமாக வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பதற்கான அபாயம் காணப்படுவதால் முப்படையினரை தயார் நிலையில் வைக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன், மாவட்ட பிரதேச செயலாளர்களுடன் இணைந்து நிவாரணங்களை வழங்குமாறும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Discussion led Prime Minister ranil wickramasinghe Temple Trees