மார்செய்யில் உள்ள Saint-Charles ரயில் நிலையத்தில், வெடிகுண்டு தயாரிக்கும் சாதனங்களுடன் கூடிய மர்ம பை ஒன்றுடன் நபர் ஒருவர் நுழைந்ததால், ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் குறித்த மர்ம நபரும் கைது செய்யப்பட்டமை நாம் அறிந்ததே.Bulgaria man arrested Saint-Charles
இந்நிலையில் தொடரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மர்ம நபர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே 19, Saint-Charles நிலையப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டதுடன், நான்கு மணிநேர போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னர், பல்கேரிய குடியுரிமை கொண்டவர் எனவும், பல்கேரியா நாட்டில் இவர் தேடப்பட்டுவரும் குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச பிடிவிறாந்து குறித்த நபருக்கு வழங்கப்பட்டதுடன், இன்று Aix-en-Provence நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
- தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி