மானுஸ் தீவில் ரோஹிஞ்சா அகதிக்கு நேர்ந்த கொடுமை

0
1051
Manus Island Suicide

Manus Island Suicide

மானுஸ் தீவில் அகதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹிஞ்சா அகதியொருவரெ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த அகதி, தடுப்பு முகாமிலிருந்து, தீவின் முக்கிய நகருக்கு அழைத்துச் செல்லப்படும் வேளையில் வாகனத்தில் இருந்து விழுந்தே உயிரிழந்ததாக சக அகதிகள் மற்றும் தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அவரது முடிவுக்கான காரணம் என்னவென தெரியவில்லையெனவும், இது தற்கொலையே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் உளவியல் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இருந்தபோதிலும் அவருக்கு மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக சக அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இது மனிதாபிமானமற்ற நடவடிக்கையென அவர்கள் வர்ணித்துள்ளனர்.

மனித உரிமை மற்றும் தொண்டு நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.