தலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்-வெறிச்சோடிய கிராமங்கள்!

0
918
Thousands men-deserted villages hood

Thousands men-deserted villages hood

சென்னையைச் சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அத்திமூரிலுள்ள குலதெய்வ கோவிலுக்கு கடந்த 9-ஆம் தேதி சென்றுள்ளார்.

அங்கே குடும்பத்துடன் அவர்கள் நின்றுகொண்டிருந்த போது அந்த கிராமத்தின் தெருவில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர், அந்த குழந்தைகளை கண்ட மூதாட்டி குழந்தைகளை அழைத்து கையில் இருந்த சாக்லேட் கொடுத்துள்ளார், இதனை கண்ட அப்பகுதி மக்கள் ருக்மணி பாட்டியின் குடும்பத்தினரை குழந்தை கடத்தும் கும்பலோ என்று சந்தேகித்துள்ளார்கள்.

அதற்குள் அங்கே ஊர்மக்கள் கூட்டம் கூட சந்தேகமடைந்த ஊர் மக்கள் ருக்மணி பாட்டியின் குடும்பத்தினர் 5 போரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர், வலியால் அனைவரும் துடிக்க இருப்பினும் அப்பகுதி மக்கள் விடாமல் கொலை வெறித்தனமாக தாக்கப்பட்டதில் ருக்மணி பாட்டி அந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் அவரது குடும்பத்தினர் 4 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே ருக்மணி பாட்டியின் கொலை வழக்கு குறித்து அத்திமூர், திண்டிவனம், களியம், தம்பு கொட்டான், பாறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 44 பேரை போலீஸார் இதுவரையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இதன் காரணமாக 7 கிராமங்களை சேர்ந்த 2000-த்திற்கும் மேற்பட்ட ஆண்கள் தலைமறைவாகி உள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியது – சம்பவம் நடந்த இடத்தில் சேகரித்த வீடியோ காட்சிகளை வைத்துதான் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளோம், அப்படிதான் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது, இன்னும் சில பேரை தேடி வருகிறோம் என்றார்.

More Tamil News

Tamil News Group websites :