அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

0
209
Selangor Sultan agrees abdicate Azmin , malaysia tami news, malaysia, malaysia news, azmin ali ,

{ Selangor Sultan agrees abdicate Azmin }

மலேசியா: மத்திய அரசாங்கத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் பதவியை ஏற்கவிருக்கும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியைத் துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்திருப்பதாக அவரது அந்தரங்கச் செயலாளர் டத்தோ முகமட் முனிர் பானி தெரிவித்துள்ளார்.

பிரதமர் துன் மகாதீர் வழங்கியிருக்கும் அமைச்சர் பதவியை அஸ்மின் அலி ஏற்கும் வகையில் இந்த மந்திரி பெசார் பதவியை அவர் துறப்பதற்காக இந்த ஒப்புதலை அவர் வழங்கியுள்ளார்.

இந்த புதிய அமைச்சர் பதவி குறித்து துன் மகாதீரை நேற்று சந்தித்த அஸ்மின் அலி நாளை சிலாங்கூர் சுல்தானை சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களை அவர் சந்தித்த போது மந்திரி பெசார் பதவியை துறக்கவிருப்பதை மறைமுகமாக கூறினார். எனினும், சிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசார் தேர்தெடுக்கப்படும் வரையில் அவர் இப்பதவியைத் தொடர்வார் என கூறப்படுகின்றது.

அதே சமயம் புதிய மந்திரி புசாரை நியமிப்பதற்கு முன்பு அதற்கான புதிய வேட்பாளர்கள் பட்டியலை மாட்சிமைத் தங்கிய மாமன்னரிடம் அஸ்மின் அலி சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் புதிய மந்திரி புசாரை சுல்தான் ஷாராபுடின் நியமித்த பிறகு தமது மந்திரி புசார் பதவியிலிருந்து அஸ்மின் அலி விலகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது 1959 சிலாங்கூர் அரசு அமைப்புச் சட்டம் மற்றும் கூட்டரசு அரசியலைமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப உள்ளது என்று ஓர் அறிக்கையில் முகமட் முனிர் பானி குறிப்பிட்டுள்ளார்.

பிகே ஆர் துணைத் தலைவருமான அஸ்மின் அலி 2ஆம் தவணையாக சிலாங்கூர் மந்திரி புசாராக சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் கடந்த 11ஆம் திகதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார்.

தொடக்கமாக இவர் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி மந்திரி புசாராகப் பதவி ஏற்று சிலாங்கூரை வளர்ச்சி மிக மாநிலமாக முன்னேற்றியுள்ளார்.

அவரது தலைமைத்துவத்தின் கீழ் அவர் பரிவுமிக்க மக்கள் திட்டத்தைக் கொண்டு வந்ததோடு சிலாங்கூர் மக்களுக்காக பல்வேறு சலுகைகளையும் அளித்துள்ளார்.

தற்போது, அவர் மத்திய அமைச்சராக பதவியேற்கும் காரணத்தால் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கவிருப்பது சிலாங்கூர் மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் மீண்டும் அப்பதவியை தொடர்வதற்காக பெட்டிஷன் வாயிலாக ஆதரவு திரட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Tags: Selangor Sultan agrees abdicate Azmin

<< RELATED MALAYSIA NEWS>>

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

<<Tamil News Groups Websites>>