எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து : 4 பெட்டிகள் எரிந்தது!

0
704
Fire accident express train 4 boxes burned

Fire accident express train 4 boxes burned

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து டெல்லிக்கு ஆந்திர பிரதேஷ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தினமும் சென்று வருகிறது.

இன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் விசாகப்பட்டினம் நோக்கி வந்துகொண்டிருந்தது, மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள பிர்லா நகர் ஸ்டேஷனுக்கு காலை 11:50 மணிக்கு வந்தபோது ரயிலில் திடீரென்று தீ பிடித்தது, பி-6 ஏசி கோச்சில் பிடித்த தீ மளமளவென பரவி அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது, உடனே பிர்லா நகர் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு அதில் இருந்த பயணிகளை வெளியேற்றினர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர், தீ பிடித்ததற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை, மேலும் இதுகுறித்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :