தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை

0
524
Rajitha Senaratne said government make strong decision Vijayakala

(Action control spread virus infection southern province)
தென்மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதர அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பணித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹவிற்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய 10 ஹைஃப்ளோ ஒட்சிசன் இயந்திரங்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அத்துடன், வைத்தியர்கள் கோரும் அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.

காலி கராப்பிட்டிய, மாத்தறை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் 600 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.

இந்த நோய்த் தொற்றுக்குள்ளான பலர் உயிரிழந்துள்ளதுடன், இன்புளுவென்சா வைரஸ் காரணமாக இந்த நோய் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Action control spread virus infection southern province