பிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை!

0
172
12 youths attack- kill person

கடந்த மே 18 ஆம் திகதி Pau (Pyrénées-Atlantiques) நகரில் 38 வயதுடைய நபர் ஒருவரை பல இளைஞர்கள் சேர்ந்து மோசமாக அடித்துக் கொன்றுள்ளனர்.12 youths attack- kill person

மேற்கு ஆப்பிரிக்க நாடான Burkinabé இனை சேர்ந்த நபர் ஒருவரை 12 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து மோசமாக தாக்கி அடித்துக் கொன்றுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில், வீதியில் சென்றுகொண்டிருந்த குறித்த நபரினை வழி மறித்து, மிக மோசமாக தாக்கிவிட்டு, பின்னர் அவரை வீதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

உயிருக்குப் போராடிய குறித்த நபர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு மருத்துவக்குழு வந்திருந்த போதும் குறித்த நபரை காப்பாற்ற முடியவில்லை.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணைகளின் படி, கொலை செய்யும் நோக்கில் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், எதிர்பாரா விதமாக இந்த உயிரிழப்பு நடந்துள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கதிரை ஒன்றின் மூலமே குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**